டாக்டர் தர்மம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்: Dr. Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Scheme

திட்டத்தின் நோக்கம் – விதவைகளுக்கு புதுவாழ்வு அளித்தல்
வழங்கப்படும் உதவி
திட்டம் 1
ரூ.25,000 – வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 –காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்) மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.
திட்டம் 2
- ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
திட்டம் 1
- கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2
- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (னுiயீடடிஅய ழடிடனநசள) எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- வருமான வரம்பு ஏதும் இல்லை
- மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமகளின் வயது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்
- விதவைச் சான்று
- மறுமணம் செய்வதற்கான திருமண அழைப்பிதழ்
- மணமகன் மற்றும் மணமகளின் வயதுச் சான்று
- பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று திட்டம் 2
- திருமண புகைப்படம்
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு
- திருமண நாளிலிருந்து 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- தொடர்பு அலுவலரின் பதவி – மாவட்ட சமூகநல அலுவலர்கள்
Detailed Notification Link – CLICK HERE
The post டாக்டர் தர்மம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் appeared first on GOVERNMENT JOB LIVE.
Category : governmentjoblive
0 Comments