அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்: Annai Teresa Orphan Girl Marriage Financial Assistance Scheme

திட்டத்தின் நோக்கம்
ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுதல்
வழங்கப்படும் உதவி
திட்டம் 1
- ரூ.25,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம் 2
- ரூ50,000 – காசோலை மற்றும் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்
திட்டம் 1
1. கல்வித் தகுதி தேவை இல்லை.
திட்டம் 2
- பட்டதாரிகள் கல்லிலூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
- பட்டயப் படிப்பு (Diploma Holders) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பொது
- ஆதரவற்ற பெண்கள்
- வருமான வரம்பு ஏதும் இல்லை
- திருமணத் தேதியன்று மணப்பெண் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்
திட்டம் -1
- சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது
- தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் வயதுச் சான்று
திட்டம் 2
1. பட்டப்படிப்பு படித்தவர்கள் கல்லூரிகள் தொலைதூரக் கல்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வி இயக்குனரசத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்.
விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு
- திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
- சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்,
தொடர்பு அலுவலரின் பதவி –மாவட்ட சமூகநல அலுவலர்கள்
Detailed Notification Link – CLICK HERE
The post அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம் appeared first on GOVERNMENT JOB LIVE.
Category : governmentjoblive
0 Comments