சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்: Sathiyavani Muthu Ammaiyar Ninaivu Free Supply Of Sewing Machine Scheme

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்
சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம்

திட்டத்தின் நோக்கம்

 

சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற ஆண் மற்றும் பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குதல்.

 

வழங்கப்படும் உதவி –தையல் இயந்திரம் மற்றும் உபகரணங்கள்

 

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

 

  1. ஆதரவற்ற பெண்கள் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனுடைய ஆண்கள் பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிறமகளிர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர்.
  2. தையல் தைக்க தெரிந்திருக்க வேண்டும்.
  3. ஆண்டு வருமானம் ரூ.72,000 – க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  4.  20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

 

  1. ஆதரவற்றவர் கைவிடப்பட்டவர் விதவை மாற்றுத் திறனுடையோர் என்பதற்கான சான்றிதழ்.
  2. குடும்ப வருமானச் சான்றிதழ்.
  3. வயதுச் சான்றிதழ்.
  4. விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ்.
  5. சாதிச் சான்று.
  6. விண்ணப்பதாரரின் புகைப்படம்.

திட்டம் குறித்த விவரம்

 

சமூக நலத் துறையின் மூலம் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள், ஆண் பெண் மாற்றுத் திறனாளிகள், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சுயமாக தொழில் செய்து தங்களது வருவாயைப் பெருகிக் கொள்வதற்கு உதவிடும் வகையில், சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலலவ தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் 2013 -14 ஆம் நிதியாண்டு முதல் கூடுதல் அம்சங்களைக் கொண்ட நவீன ரக தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்பு அலுவலரின் பதவி-மாவட்ட சமூகநல அலுவலர்கள்

Detailed Notification Link –CLICK HERE

The post சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் appeared first on GOVERNMENT JOB LIVE.



Category : governmentjoblive

Post a Comment

0 Comments

Shayari Quote Wishes SMS
Team of Dollar_Boy
x